பொதுவாக நட்சத்திரங்களில் இரண்டு ஹைட்ரஜன் அனுகருக்கள் இணைந்து ஹீலியம் என்ற தனிமம் உண்டாகிறது.
இந்த நிகழ்வுக்கு அணுக்கரு இணைவு என்று பெயர்.இந்த நிகழ்வில் அதிகளவு ஆற்றல் வெளிப்படும்.
இந்த ஹைட்ரஜன் நட்சத்திரங்களின் எரிபொருள்.இது இருக்கும் வரை அணுக்கரு இணைவு தொடர்ந்து நடந்து கொண்டு ஆற்றல் வெளிப்பட்டு கொண்டு இருக்கும். நம் சூரியன் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இந்த நிகழ்வில் நட்சத்திரத்தின மைய பகுதியில் ஒரு சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசை நட்சத்திரத்தின வெளிப்புறத் தை உள் நோக்கி இழுக்கும் .
இந்த வலிமை மிகு ஈர்ப்பு விசைக்கு எதிராக அந்த நட்சத்திரத்தில் நிகழும் அணுக்கரு இணைவு நிகழ்வில் வெளிவரும் ஆற்றல் அதை சமன் செய்யும்.
அதாவது உள் இருக்கும் ஈர்ப்பு விசை= வெளிவரும் ஆற்றல் ஒரு வேளை அந்த நட்சத்திரத்தின வாழ்நாள் முடிந்து அணுக்கரு இணைவு நின்றுவிடும் பட்சத்தில்,அதாவது எரிபொருள் ஆன ஹைட்ரஜன் தீர்ந்து விடும் பட்சத்தில்.
வெளிவரும் ஆற்றல் நின்று விடும்.எனவே நட்சத்திரத்தின் மையத்தில் உள்ள ஈர்ப்பு விசை நட்சத்திரத்தை உள் நோக்கி இழுக்கும். அவ்வாறு நிகழும்போது கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி மிகவும் சிறியதாக மாறும்.ஒரு
குறிப்பிட்ட நிறைக்கு மேல் பெற்று இருப்பின் அது சிதைந்து கருந்துளை யாக மாறிவிடும். இனி விரிவாக பார்ப்போம்…….. முன்னர் சொன்னது போல ஒரு நட்சத்திரத்தில உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் அனுவினை உண்டாக்கும்.ஹீலியம் ஹைட்ரஜன் ஐ விட அதிக நிறை உடையது. அப்படி என்றால் தொடர்ச்சியாக பலகோடி ஹைட்ரஜன் அணுக்கள் இணைத்து ஹீலியம் உருவாகி கொண்டே இருக்கும் நொடிப்பொழுதில்.
இதனால் அந்த நட்சத்திரத்தின் நிறை அதிகரிக்கிறது.இது தான் அணுக்கரு இணைவு.இந்நிகழ்வில் வெளிவரும் ஆற்றல் வெப்ப ஆற்றலாக வெளிவரும். ஒரு அணுக்கரு இணைவில் குறைந்த நிறை உடைய அணு அதிக நிறை உடைய அணுவாக மாறிக்கொண்டு இருக்கும்.
நட்சத்திரத்தின் எரிபொருள் ஹைட்ரஜன் முழுவதும் ஹீலியம் ஆக மாற பல பில்லியன் வருடங்கள் ஆகும்.அவ்வாறு எரிபொருள் முழுவதும் தீர்ந்து போய்விடும் பட்சத்தில்,எஞ்சி இருப்பது ஹீலியம் மட்டுமே. இப்பொழுது நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசை நட்சத்திரத்தை உள் நோக்கி இழுக்கும்.அவ்வாறு நிகழும் போது நட்சத்திரத்தின் உருவளவு சுருங்கி கொண்டே இருக்கும் அதே வேளையில் ஆற்றல் அதிகமாகி கொண்டே இருக்கும்.பின்பு நட்சத்திரத்தில உள்ள ஹீலியம் அணுக்கள் ஒன்று இணைந்து அதிக நிறை உடைய லித்தியம் அணுவாக மாற்றம் அடைந்து கொண்டு இருக்கும் . மேற்கூறிய நிகழ்வில் நட்சத்திரம் மீண்டும் விரிவடையும.
மீண்டும் ஆற்றல் வெளிவரும். இந்த நிகழ்வு பல பில்லியன் வருடங்கள் தொடர்ந்து சுருங்கி பின்பு விரிவடைந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
இந்த சுருங்கி விரிவடையும நிகழ்வு ஒரு அதிக நிறை உடைய அணு வாக மாறும் வரை தொடர்ந்து நிகழும். இந்த நிகழ்வு இரும்பு அணுக்கள் உருவாகும் வரை நிகழ்ந்து கொண்டே இருக்கும் பல பில்லியன் வருடங்களாக.
அந்த நட்சத்திரத்தின் எரிபொருள் முழுவதும் இரும்பு அணுவாக மாறிய பின்பு ,இதுவரை வெளியிடப்பட்டு கொண்டு இருந்த ஆற்றல் நின்று ஆற்றலை இரும்பு அணுக்கள் உறிஞ்சி விடும்.எனவே ஈர்ப்பு விசை நட்சத்திரத்தை உள் நோக்கி இழுத்து மிக சிறியதாக சுருங்க ஆரம்பிக்கும்.
அப்பொழுது நிறை அதிகரிக்கும்.இந்த நிகழ்வில் மூன்று வாய்ப்புகள் சாத்தியம்.அவற்றில் ஒன்று கருந்துளை உண்டாவது. நட்சத்திரத்தின் மையத்தில் குறிப்பிட்ட அளவு நிறை உண்டாகவில்லை எனில் சுருங்குதல் நிகழ்வு நின்றுவிடும்.மாறாக உண்டான இரும்பு அணுக்களின் எலக்ட்ரான்கள் ஒன்றை ஒன்று வில க்கி கொள்ளும்.
இந்த விலக்குக் விசை ஈர்ப்பு விசைக்கு எதிராக உண்டாகும். அப்பொழுது அந்த நட்சத்திரம் வெள்ளை குள்ளன்( white dwarf) ஆக மாறி விடும். ஒரு வேளை நட்சத்திரத்தின் மையத்தில் நிறை அதிகம் உண்டாகும் எனில் இரும்பு அணுக்களின எலக்ட்ரான்கள் சுருங்குதல் நிகழ்வை கட்டுப்படுத்த இயலாது.எனவே எலக்ட்ரான்கள் புரோட்டான் களுடன் வினைபுரிந்து நியூட்ரான் ஆக மாறிவிடும்.
எனவே சுருங்குதல் ஒரு குறிப்பிட்ட அளவில் நின்று விடும்.இந்த முறையில் உருவாவது நியூட்ரான் நட்சத்திரம்( neutron stars). ஒரு வேளை நட்சத்திரத்தின் மையத்தில் மிக மிக அதிக நிறை உண்டாகும் போது நியூட்ரான் ஆல் கட்டுப்படுத்த முடியாமல் சுருங்கி சுருங்கி சுருங்கி கடைசியில் ஒரு புள்ளி யாக மாறி கருந்துளை யாக மாற்றம் அடைந்து விடும். இப்படி தான் கருந்துளை உருவாகிறது.
நன்றி